டெல்லி: தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது, 6 மாநில போக்குவரத்து கழகங்களுக்கு ரேடியோ அதிர்வெண் அடிப்படையிலான பாஸ்டேக் அடையாள அட்டைகளை ஏற்குமாறு கோரியுள்ளது.

நாடு முழுவதும பாஸ்டேக் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. சுங்கச்சாவடிகளில் நெரிசல், கூடுதல் நேரம், எரிபொருள் விரையம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கான காலக் கெடுவும் முடிந்துவிட்டது.

இந் நிலையில், மாநில போக்குவரத்துத் துறைக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது ஒரு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது மத்திய அரசால் பாஸ்டேக்குகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

எனவே சுங்கக்சாவடிகளை கடந்து செல்ல மாதாந்திர பாஸ்களை பயன்படுத்த முடியாது. அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விதிகள், ஒரு மாதத்திற்கு 50 பயணங்களை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

எது எப்படி இருப்பினும், பாஸ்டேக்குகளை செயல்படுத்துவதன் மூலம், கட்டணமானது கணினியால் தானாகவே கழிக்கப்படும். எனவே, வணிக வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் வழங்க முடியாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையமான வட்டாரங்கள் தெரிவித்தன.