தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ 2 லட்சம் கோடி கடன் திரட்ட திட்டம்

டில்லி:

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஐந்து ஆண்டு காலத்திற்கான கடனாக ரூ 2 லட்சம் கோடி பெற திட்டமிட்டுள்ளது. பாரத்மாலா உள்ளிட்ட பல உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக 2018-2023 நிதி ஆண்டுகளில் 6,92,324 கோடி ரூபாய் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், 3,85,000 கோடி ரூபாய் பாரத்மாலா பரியோஜனா வுக்கும், 3 லட்சம் கோடி ரூபாய் பிற வழக்கமான நெடுஞ்சாலை பணிகளுக்காகவும் முதலீடு செய்யவுள்ளது, என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI -National Highways Authority of India) சமீபத்தில் தாக்கல் செய்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

லைஃப் இன்சூரன்ஸ் ஃபண்ட் மற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில் மசாலா பாண்டுகள் போன்ற திட்டங்கள் மூலம் ஏற்கனவே  சில கடன்களை பெற்றுள்ள நிலையில், பாரத்மாலா பாண்டுகள் மற்றும் நீண்டகால பாண்டுகள் மூலம் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

பாரத்மாலா பரியோஜனாவின் கீழ் 34,800 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை கேட்டுள்ளது.