பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: டில்லியில் 14 பேரை கைது செய்த என்ஐஏ அதிகாரிகள்

டில்லி:

யங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக, சமீபத்தில் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 2 பேரிடம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, தலைநகர் டில்லியில், 14 பேரை  தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள்  (என்ஐஏ)  கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாத குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட பலர் தமிழகத்திலும், கேரளாவிலும் இருந்து திட்டங்கள் தீட்டப்பட்ட தகவல்கள் வெளியானது. இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் சென்னை மற்றும் நாகை உள்பட கேரளாவின் பல  இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திடீர் சோதனைகளை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  ஐஎஸ், அல்கொய்தா மற்றும் வஹாபி இஸ்லாம் போனற  இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில்  கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை நாகையில் சோதனை நடத்தினர்.  அப்போது  2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  பயங்கரவாத அமைப்புக்கு பணம் திரட்டுவது மற்றும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது குறித்த தகவல் கிடைத்தது. மேலும், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்த தகவலும் பெறப்பட்ட நிலையில், அவர்களை கைது செய்யும் முயற்சியில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டனர். இதில்14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக  தேசிய புலனாய்வு அதிகாரிகள்  தெரிவித்து உள்ளனர்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.