கேரளா, மேற்குவங்கத்தில் 9 அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது! என்ஐஏ அதிரடி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மற்றும்  மேற்குவங்க மாநிலத்தில்,.  9 அல்கொய்தா பயங்கர வாதிகளை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிரடியாக கைது செய்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அல்கொய்தா பயங்ரகவாத அமைப்பினர் இந்தியாவின் சில பகுதிகளில் நாசகார வேலைகளில் ஈடுபட்ட உள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிரமான ரகசிய நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

இதன் வாயிலாக,  கேரளா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் நடத்திய அதிரடி சோதனையில், அங்கு பதுங்கி இருந்து அல்கொய்தா பயங்கரவாதிகளை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து,. ஆயுதங்கள், நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக என்ஐஏ வெளியிட்டுள்ள செய்தியில்,  கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள்,  நாட்டில் நாசகார வேலைகளை செய்ய, பணம் திரட்டி வந்ததும், டெல்லி  சென்று ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் வாங்கி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்பின் சமூக வலைத்தளங்கள் மூலமாக பயங்கரவாதிகளாக மாறி, நாட்டின் தலைநகர் உள்பட பல இடங்களில் தாக்குதல்களை நடத்த  திட்டமிட்டுவந்துள்ளனர்.

கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் ஆகிய இடங்களில் மேற் கொண்ட அதிரடி சோதனையில் அல்கொய்தா தீவிரவாதிகள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் மேற்கு வங்கத்திலும், 3 பேர் கேரளாவிலும் கைதாகியுள்ளனர்.

கேரளத்தில் இருந்து முர்ஷித் ஹசன், இயக்கூப் பிஸ்வாஸ், மொஸாரஃப் ஹோஸ்ஸி ஆகிய 3 பேரும்,  மேற்குவங்கம்  முர்ஷிதாபாத்தில் இருந்து நஜ்முஸ், சூஃபியான் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து மிகப் பயங்கர ஆயுதங்களும், வெடிபொருள்கள் தயாரிப்புக் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய பகுதிகளில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு, மக்களை கொலை செய்ய இந்த கும்பல் சதித்திட்டம் தீட்டியதாகவும், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதலில் ஈடுபடும் நடவடிக்கைகளில் இந்த கும்பல் தீவிரமாக ஈடுபட்டிருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.