திரிபுவனம்

தேசிய புலனாய்வுத் துறை சோதனையில் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர் ஐ எஸ் தீவிரவாத ஆதரவாளர் என கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் கும்பகோணம் அருகில் உள்ள திரிபுவனத்தில் உள்ள தலித் காலனியில் ஒரு சில இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்ய முனைந்துள்ளனர்.    பாமக பிரமுகரான ராமலிங்கம் அவர்களை தடுத்துள்ளார்.   அவர்கள் ராமலிங்கத்தை தாறுமாறாக திட்டி உள்ளனர்.

கோபமடைந்த ராமலிங்கம் அவர்களுடைய குல்லாவை பிய்த்து எறிந்துள்ளார்.   அத்துடன் அவர்கள் நெற்றியில் விபூதி பூசி உள்ளார்.    இதனால் அங்கு மிகவும் பரபரப்பு உண்டானது.   அங்கு வந்த சில இஸ்லாமிய அமைப்பினர் இரு தரப்புக்கும் இடையில் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

ஆனால் அன்று இரவு ஒரு கும்பல் ராமலிங்கத்தின் கைகளை வெட்டி வீசி உள்ளனர்.   மேலும் நடந்த தாக்குதலில் அவர் பரிதாபமாக மரணம் அடைந்தார்.  இந்த வழக்கில் காவல்துறையினர் சுமார் 10 பேரை கைது செய்துள்ளனர்.

இவர்களில் முக்கிய குற்றவாளியான நஜீம் என்பவன் உள்ளிட்ட பலர் பாபுலர் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் இந்தியா என்னும் இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவாரகள்.  நேற்று இந்த இயக்கத்தின் திருச்சி, தஞ்சை, கும்பகோணம் அலுவலகத்தில் தேசிய புலனாய்வுத் துறை சோதனை இட்டது.

சுமார் 20 இடங்களில் நண்டந்த இந்த சோதனையில் கைது செய்யப்பட்டவர்கள் வீடுகளில் 16 மொபைல் போன்கள், 21 சிம் கார்டுகள்,  3 லாப்டாப்புகள், 9 ஹார்ட் டிஸ்குகள், 7 மெமரி காருட்கள், 118 டிவிடிக்கள், 1 டாப், 7 டைரிகள், 2 பானர்கள் ஆகியவை சிக்கி உள்ளன.  அத்துடன் இந்த இடங்களில் பல ஐஎஸ் இயக்க விளம்பர நோட்டிசுகளும் சிக்கி உள்ளன.

இது குறித்து தேசிய புலனாய்வுத் துறை அரசு வழக்கறிஞர் சி எஸ் எஸ் பிள்ளை, “மேலே குறிப்பிட்டவைகள் தவிர ஐஎஸ் தீவிர வாத இயக்கத்தின் பல விளம்பரங்கள் மற்றும் இரு வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கிடைத்துள்ளன.    இவர்கள் ஐஎஸ் தீவிர வாத இயக்கத் தொடர்புள்ளவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் காலை 8 மணிக்கு ராமலிங்கம் மதமாற்றம் செய்ய வந்த இஸ்லாமியர்கள் நெற்றியில் விபூதியை பூசி உள்ளார்.   அன்று இரவு அவருடைய கைகள் வெட்டப்பட்டுள்ளன.   அவர் இஸ்லாமியர்களின் குல்லாவை கழற்றி எரிந்ததால் அவர் தலையில் வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இவை அனைத்தும் ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தின் ”கண்ணுக்கு கண் கைக்கு கை” என்னும் பழிவாங்கும் நடவடிக்கையுடன் ஒத்துப் போகின்றன.   எனவே இது ஒரு திட்டமிட்ட கொலை என்பது தெளிவாகி உள்ளது.    பி எஃப் ஐ இயக்கத்த்துக்கும் ஐ எஸ் இயக்கத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.