தமிழகத்தில் சென்னை, காயல்பட்டினம் உள்பட பல பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை

சென்னை :

ன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அதிகாரி வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தமிழகத்தில் அவ்வப்போது சோதனை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.

இன்று காலை முதல் சென்னை, கடலூர், காயல்பட்டினம் உள்பட பல பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரி 8-ஆம் தேதி களியக்காவிளை சோதனைச் சாவடியில் இரவு பணியின்போது  சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் இரவு சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்தக் கொலையில் பயங்கரவாத  அமைப்புகளுக்கு தொடா்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் வழக்கை தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு (என்ஐ.ஏ) தமிழக அரசு  மாற்றியது. இதைத் தொடா்ந்து கேரள மாநிலம் கொச்சியை சோந்த என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கொலை தொடா்பாக விசாரணை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகள், நாகா்கோவில் கோட்டாறு இளங்கடையைச் சோந்த தவ்பீக், தக்கலையை அடுத்த திருவிதாங்கோட்டைச் சோந்த அப்துல் சமீம் ஆகியோரை கைது செய்தனா். மேலும், அண்டை மாநிலங்களில் இருந்தும் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தி வரும் விசாரணைகளை த் தொடர்ந்து,  வில்சனை கொலை செய்யப் பயன்படுத்திய கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைப் கேரளாவில் பறிமுதல் செய்தனா். இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே சென்னை, கோவை உள்பட பல பகுதிகளில் பலமுறை சோதனை நடைபெற்ற நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் மொய்தீன் பாத்திமா என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திங்கள்கிழமை அதிகாலை தொடங்கி சோதனை நடத்தி வருகின்றனர்.

வில்சன் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக இந்த வழக்கில் கைதான தவ்பீக், சமீம் உள்பட 4 பேரும் இந்த வீட்டில் தங்கி இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் நெய்வேலியில் உள்ள ஒரு வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னையில் நெற்குன்றம் பகுதியில்  அன்பரசன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு சப்ளை செய்த விவகாரம் தொடர்பாக சென்னை, சேலம், காயல்பட்டினம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும்,   தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.