16 சிக்ஸர்களை பறக்கவிட்டு நிக்கோலஸ் பூரான் & சஞ்சு முதலிடம்!

ஷார்ஜா: தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் 13வது சீசனில், தற்போதைய நிலவரப்படி மொத்தம் 16 சிக்ஸர்களை அடித்து, பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர் பஞ்சாப் அணியின் நிக்கோலஸ் பூரான் & ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்ஸன்.

இதுவரை மொத்தம் 7 போட்டிகள் ஆடியுள்ள பூரான் 16 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அவரின் மொத்த ரன்கள் 212.

அதேசமயம், இதே 16 சிக்ஸர்களை ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்ஸன் அடித்திருந்தாலும், மொத்த ரன்கள்(202) அடிப்படையில் பின்தங்கியுள்ளார்.

ராஜஸ்தான் அணியின் ராகுல் டெவாஷியா 15 சிக்ஸர்களுடன் மூன்றாமிடத்திலும், மும்பை அணியின் இஷான் கிஷான் மற்றும் அதே அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா 14 சிக்ஸர்களுடன் நான்காமிடத்திலும் உள்ளனர். ஆனால், ரோகித் ஷர்மா இதுவரை 7 போட்டிகளில் ஆடியிருக்க, கிஷான் 5 போட்டிகள் மட்டுமே ஆடியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.