Random image

பிரபல ராப் பாடகி Nicki Minaj, இசை துறையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!

கவர்சிகரமான பாடல் காட்சிகளுக்கு சொந்தக்காரரான Nicki Minaj, கடந்த 10 ஆண்டு காலமாக ராப் துறையில் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார். Nicki Minaj ஆறு முறை அமெரிக்க இசை விருதுகளை வென்றார், “American Idol” நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய நீதிபதி என பெயர் பெற்றவர். மேலும் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் “2016 Time 100” பட்டியலில் இடம்பெற்றவர் .

36-வயது ஆகும் Nicki Minaj, ட்விட்டரில் தன்னை பின்தொடரும் சுமார் 20 மில்லியன் ரசிகர்களுக்கு தான் இசை துறையில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிர்ச்சியூட்டும் தகவலினை அறிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம், Nicki Minaj தனது நெடுநாள் காதலர் Kenneth “Zoo” Petty-யை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார். பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது ட்விட்டர் கணக்கின் பெயரை Mrs.Petty என மாற்றிக்கொண்டார்.

Nicki Minaj, திருமணம் ஆகி கருவுற்று இருக்கலாம். இதன் காரணமாக தனது பாதையில் இருந்து விலகி இருக்கலாம் என கூறப்படுகிறது.