SAKHIR, BAHRAIN - APRIL 20: Nico Rosberg of Germany and Mercedes GP celebrates finishing first during qualifying for the Bahrain Formula One Grand Prix at the Bahrain International Circuit on April 20, 2013 in Sakhir, Bahrain. (Photo by Mark Thompson/Getty Images)வியன்னாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கார்பந்தைய வீரர் ரோஸ்பெர்க், “பார்முலா 1 கார் பந்தய போட்டியிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். சாம்பியன் பட்டம் வென்றதுமே இந்த முடிவை எடுத்துவிட்டேன். இனி ஒரு நல்ல கணவனாகவும் தந்தையாகவும் இருக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ரோஸ்பெர்க் சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது, “கார் பந்தயத்தில் பங்கேற்க வேண்டும் என்பது என் கனவு. இதுவரை 25 ஆண்டுகள் கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளேன். நான் நினைத்தது போல் ஃபார்முலா 1 போட்டியில் சாம்பியன் பட்டமும் வென்று விட்டேன். இதற்காக பல்வேறு தியாகங்கள் செய்துள்ளேன். எனது கார் பந்தய வாழ்க்கையில் நான் இப்போது உச்சகட்டத்தில் இருக்கிறேன். இதுவே நான் ஓய்வு பெறுவதற்கு சரியான தருணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

1993-இல் ஆலன் பிராஸ்ட் நடப்பு சாம்பியனாக இருந்தபோது ஓய்வு பெற்றார். அதன்பிறகு நடப்பு சாம்பியன் நிகோ ரோஸ்பெர்க் இரண்டாவது வீரராக ஓய்வு அறிவித்துள்ளார்.