ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் நிக்கோலஸ் கேஜ் (வயது 57) தனது 26 வயது காதலி ரிக்கோ ஷிபாடாவை ஐந்தாவது முறையாக திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

லாஸ் வேகாஸில் உள்ள வின் ஹோட்டலில் பிப்ரவரி 16-ம் தேதி நடந்த இந்த திருமணத்தை நடிகரின் பிரதிநிதி ஷானன் பார் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார்.

எரிகா குக்கியுடன் மார்ச் 2019-ல் நான்கு நாட்கள், நடிகை பாட்ரிசியா அர்குவேட்டுடன் 1995 முதல் 2001 வரை, லிசா மேரி பிரெஸ்லியுடன் 2002 முதல் 2004 வரை, ஆலிஸ் கிம்முடன் 2004 முதல் 2016 வரை திருமணம் செய்து வாழ்ந்தார் நிக்கோலஸ்.

திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் ஒரு சிறிய கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டனர். அதில் நிக்கோலஸின் முன்னாள் மனைவி, ஆலிஸ் மற்றும் அவர்களின் மகன் கல் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.