நிதாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வங்காளதேசம்

நிதாஸ் டிராபி முத்தரப்பு மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில்  இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதின.

இந்த போட்டியில் வங்காளதேசம் 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற கடைசி லீக் போட்டியில்  போட்டியில் இலங்கையை வீழ்த்தியது.வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதை வங்காளதேச அணியினிர் பாம்பு நடனம் ஆடி மைதானத்தில் கொண்டாடினர். இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது வங்களாதேச அணி.

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர், இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது.

இதில் இந்திய அணி (3 வெற்றி, ஒரு தோல்வி) ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் நேற்று நடைபெற்ற  நடந்த கடைசி லீக்கில் இலங்கை – வங்காளதேச அணிகள் மோதின.

விரலில் ஏற்பட்ட காயத்தால் சில ஆட்டங்களில் விளையாடத வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன்  நேற்றைய போட்டியில் பங்கு பெற்றார். அதன் காரணமாக அணியில் இருந்து மற்றொரு வீரரான அபு ஹைதர் நீக்கப்பட்டார்.

அதுபோல  இலங்கை அணியிலும் இரு வீரர்கள் மாற்றப்பட்டனர். சமீரா, சுரங்கா லக்மல் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சுரு உதனா, அமிலா அபோன்சா சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேசம் இலங்கையை பேட் செய்ய பணித்தது. இதன்படி பேட்டை பிடித்த இலகை அணியினர் சரசரவென விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

8 ஓவரிலேயே 41 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை அணி, வங்கதேச அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள திறனின்றி தள்ளாடியது.

அதைத்தொடர்ந்து, களத்தில் இறங்கிய இலங்கை  விக்கெட் கீப்பர் குசல் பெரேராவும் (61 ரன், 40 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் திசரா பெரேராவும் (58 ரன், 37 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) நிதானமாக நின்று ஆடத்தொடங்கினார். இதன் காரணமாக அவர்கள்  அரைசதத்தை தாண்டினர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. வங்காளதேசம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

தொடர்ந்து களமிறங்கயி வங்காளதேச அணி நிதானமாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் இலங்கையின் பந்துவீச்சை அநாயசமாக எதிர்கொள்டு அரை சதத்தை தாண்டினார். இடையிடையே விக்கெட்டு களும் சரிந்த நிலையில், ஒரே ஒரு ஓவர் மட்டுமே இருந்த நிலையில்,  வெற்றி பெற 12 ரன் தேவைப்பட்டது.

பரபரப்பாக நடைபெற்ற கடைசி ஓவரை இலகையின் வேகப்பந்து வீச்சாளர் உதனா வீசத்தொடங்கினார். அவரது  முதல் 2 பந்துவீச்சில் ரன்களை எடுக்க தடுமாறிய வங்கதேச அணி வீரர் முஸ்தாபின் ரகுமான் ரன் அவுட் ஆனார்.

இந்த நிலையில்  3வது பந்தை பவுண்டரிக்கு விளாசினர் மக்முதுல்லா . இதன் காரணமாக மைதானத்தில் பரபரப்பு நிலவியது. 4-வது பந்தில் ரன் 2 ரன் எடுத்த நிலையில், கடைசி  2 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த பரப்பான நிலையில் 5வது பந்து பறந்தது வந்தது. அதை சிக்சராக மாற்றிய மக்முதுல்லா வங்களா தேச அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

கடைசி நேர விறுவிறுப்பான ஆட்டத்தை எதிர்நோக்கி இருந்த இரு அணியை சேர்ந்த ரசிகர்களும், வங்கதேச அணியின் எதிர்பாராத  வெற்றியால் இலங்கை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வங்காளதேச அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. மக்முதுல்லா 43 ரன்களுடன் (18 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி இறுதிப்போட்டிக்குள் (2 வெற்றி, 2 தோல்வி) நுழைந்தது. வெற்றியை, வங்காளதேச வீரர்கள் பாம்பு நடனம் ஆடி கொண்டாடினர்.

இலங்கை அணி (ஒரு வெற்றி, 3 தோல்வி) பரிதாபமாக வெளியேற்றப்பட்டது.