ருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது அண்ணன் மகள் தீபா, அங்கு வந்தார். அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.
பிறகு ஜெயலலிதா இறந்த செய்தியை அறிந்து மருத்துவமனை வந்தபோதும் அவரை விரட்டியடிக்காத குறையாக ஒரு கும்பல் அகற்றியது.
99
அடுத்து ஜெயலலிதா உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த போதும் தீபா, கூட்டத்தோடு முண்டியடித்து வந்து அஞ்சலி செலுத்துச் சென்றார்.
இந்த நிலையில் அவர்,  ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதற்குக்கூட மிகுந்த முயற்சி எடுத்து வேண்டுகோள் விடுக்கப்பட்ட பிறகே அனுமதி கிடைத்தது.
அப்போது அங்கு குழுமியிருந்த மக்கள், தீபாவோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள முண்டியடித்தனர்.  பிறகு அவர் போலீஸ் பாதுகாப்புடன்  வெளியே அனுப்பிவைக்கப்பட்டார்.