சிக்போக்:
நைஜிரியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி சிறுமிகள் பற்றிய வீடியோவை வெளியிட்டு உள்ளது தீவிரவாதிகள் அமைப்பு.
நைஜிரிய போக்கோ ஹராம்  தீவிரவாதிகள் இரண்டு ஆண்டுகளுக்கு  ஏப்ரல் 14, 2014 அன்று சிக்போக் நகரில் உள்ள அரசு  பள்ளி சிறுமிகளை கடத்தி சென்றனர்.

கடத்தப்பட்டவர்கள் எங்கு  இருக்கிறார்கள் , என்ன செய்கிறார்கள் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. அவர்களை கண்டுபிடிக்க நைஜிரிய அரசு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவின.
இதற்கிடையில், நைஜிரிய  இஸ்லாமியவாதக் குழுவான போக்கோ ஹராம் கடத்தப்பட்ட பள்ளி குழந்தைகள் பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
வீடியோவில், கையில் ஆயுதத்துடன், முகமூடி அணிந்த ஒருவர் நிற்பது போலவும், அவருக்கு பின்னால்  சுமார் 50க்கும் மேற்பட்ட சிறுமிகள் இருப்பது போன்று காட்சி வெளியாகி உள்ளது. அவர் அந்த சிறுமிகளிடம் பேசுவதுபோன்ற காட்சியும் இந்த வீடியோவில்  உள்ளது.

அதில், பல சிறுமியர்கள் அழுதுகொண்டே, தங்கள் கண்களில் வடியும்  கண்ணீரை துடைப்பது தெரிவதாகவும்,  அதில், ஒரு குழந்தை தங்களுடைய விடுதலைக்காக அரசிடம் பேசுவதற்கு பெற்றோரிடம் வேண்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பல குழந்தைகள்  நைஜிரிய அரசு படையின் வான்வழி தாக்குதலால் காயமடைந்திருப்பதாகவும் தெரிகிறது.
nygeria
இதுவரை  போக்கோ ஹராம்  தீவிரவாதிகளால் 2000க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்ருடு இருக்கிறார்கள். கடத்தப்பட்ட பள்ளி குழந்தைகளில் 40 பேருக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும், பலர் நைஜிரிய அரசின் விமானப்படை தாக்குதலில் இறந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, நைஜீரிய அரசிடமிருந்து  எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.