Random image

‘தேசிய பேரழிவு’: நைஜீரியாவில் கடுமையான வெள்ளப்பெருக்கு! 100 பேர் பலி

நைஜீரியாவில்  ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பெருக்கினால் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து நைஜீரிய அரசு தேசிய பேரழிவு என்று அறிவித்து உள்ளது.

நைஜீரியா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சுமார் 10க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக, கோகி, நைஜர், அனம்ப்ரா உள்ளிட்ட மாகாணங்களை பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், நிவாரண பணிகளை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், வெள்ளம் வடிந்ததும் மீட்பு பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவையால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்த மாகாணங்களில் நிவாரண மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நைஜர் மற்றும் பெனுவே ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கும் கோகி மாநிலத்தின் லோகோஜா தலைநகரில் நீர் நிலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.  மழைக்கு  மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இதுவும்  ஒன்றாகும்.
வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான ஆதரவு வழங்கப்பட்டு வருவதாகவும், அதேவேளை, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஐந்து அவசர நடவடிக்கை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன நைஜீரியா நாட்டின்  செய்தித் தொடர்பாளர் சானி தட்டி தெரிவித்தார்.

இந்த நிலையில் நைஜீரிய அரசு, நைஜீரியாவை தேசிய பேரிடம் பாதிக்கப்பட்ட நாடாக அறிவித்து உள்ளது.