டில்லி: ரூ. 15 கோடி மதிப்பு ஹெராயின் வைத்திருந்த நைஜீரியர் கைது

டில்லி:

டில்லி கஷ்மேரே கேட் பகுதியில் சுற்றித்திரிந்த நைஜீரியாவை சேர்ந்த எக்கேனே கென்னத் ஓன்யெட்டோபே (வயது 33) என்பவரை போலீசார் பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் 3 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 15 கோடியாகும்.

ஆப்கானிஸ்தானில் உள்ள நைஜீரியர் ஒருவர் மூலம் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் வழியாக போதைப் பொருட்களை கடத்தி வந்து டில்லி, பஞ்சாப் பகுதிகளில் எக்கேனே விற்பனை செய்து வந்துள்ளார்.

இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுக்கும் போதைப் பொருட்களை அனுப்பி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சம்மந்தப்பட்ட மற்ற ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Nigerian national was arrested today near Kashmere Gate here for possessing 3 kg of heroin worth Rs 15 crore, டில்லி: ரூ. 15 கோடி மதிப்பு ஹெராயின் வைத்திருந்த நைஜீரியர் கைது
-=-