வாஷிங்டன்:

மெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை நைஜீரிய அதிபர் முகமது புகாரி சந்தித்தார். இரு நாட்டு தலைவர்க ளும்,  பொருளாதார வளர்ச்சி மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவார்கள் எனறு கூறப்பட்டுள்ளது.

நைஜிரியாவில் போகோஹாரம் பயங்கரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவிடம் இருந்து ஆயுத உதவி மற்றும்,  பொருளாதார வளர்ச்சி மற்றும் சீர்திருத்தங்களை ஊக்குவித்தல், பயங்கர வாதத்தை எதிர்த்து, சமாதானத்திற்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது குறிதது விவாதிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்று நைஜிரிய அதிபர், அமெரிக்க அதிபரின் வேண்டுகோளை ஏற்று வாஷிங்டன் வந்துள்ளார்.

 

இன்று வெள்ளை மாளிகையில் அவர் அதிபர் டிரம்பை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் நைஜீரியாவில் போகோஹாரம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அவர்களை அடியோடு ஒழித்துக்கட்ட, நைஜீரிய அதிபர் புகாரி தீவிரமாக உள்ளார்.

இன்றைய பேச்சுவார்த்தை யின்போது, போகோஹாரம் பயங்கரவாதிகளை அடியோடு ஒழிப்பதற்கு அமெரிக்காவின் உதவியை நைஜிரிய அதிபர் கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.