நைஜீரியா: கவர்னர் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளர் வெற்றி

அபுஜா:

மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜீரியாவில் வரும் பிப்ரவரிக்குள் பொதுத் தேர்தல்கள் நடத்தியாக வேண்டும். இதில் தற்போதைய நைஜீரியா அதிபர் முஹம்மது புஹாரி போட்டியிடபோவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தென்மேற்கு பகுதி எக்கிட்டி மாநில கவர்னர் பதவிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளுங்கட்சியில் அமைச்சராக இருந்த கயோடே ஃபயேமி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் ஆல் பிராக்ரசிவ் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார்.

தற்போதைய கவர்னர் அயோடெலே ஃபயோஸேமைக்கள் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. ஆளும்கட்சி வேட்பாளர் கயோடே ஃபயேமி 45 சதவீதம் வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றி எதிர்வரும் தேர்தல்களிலும் முஹம்மது புஹாரி தலைமையிலான கட்சியின் வெற்றிக்கு கிடைத்துள்ள அச்சாரமாக கருதப்படுகிறது.