கேரளாவில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்: மாநில அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழகம் என பல மாநிலங்களில் தொற்றுகள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இந் நிலையில் கேரளாவிலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.