திருப்பதி

ன்று முதல் திருப்பதியில் இரவு  நேர ஊரடங்கு அமலாகிறது.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் அனைத்து மாநிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.  இதில் ஆந்திர மாநிலத்தில் நேற்று வரை சுமார் 9.97 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 7,841 பேர் உயிர் இழந்துள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம் 5 ஆம் இடத்தில் உள்ளது.

எனவே முக்கிய நகரமான திருப்பதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.   இங்கு ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமானோர் தரிசனத்துக்கு வருவதால் முன் அனுமதி பெற்றோருக்கு மட்டும் தற்போது அனுமதிக்கப்படுகின்றனர்.  ஆயினும் பரவல் அதிகரிப்பதால் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது.,

இந்த ஊரடங்கு இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை அமலாக உள்ளது.  எனவே இரவு 7 மணிக்கு மேல் பேருந்து, கார், ஆட்டோ, பைக் உள்ளிட்ட எந்த வாகனத்துக்கும் அனுமதி கிடையாது.  மேலும் மார்கெட், கடைகள், ஓட்டல்கள், டீக்கடை உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட உள்ளன.

இந்த ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறி வெளியி8ல் சுற்றுவோருக்கு அபராதம் விதித்தல், வாகன பறிமுதல் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.  மேலும் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கும் இந்த தடை உத்தரவு செல்லும் எனவும் அவர்களும் திருப்பதியில் எந்த பகுதியிலும் சுற்றி வரக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.