மணிப்பூரில் டிசம்பர் 31ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிப்பு…! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இம்பால்: கொரோனா பரவல் எதிரொலியாக, மணிப்பூரில் டிசம்பர் 31ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் லாக் டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், மாநிலங்களில் உள்ள தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இ ந்நிலையில், மணிப்பூர் மாநில அரசு உத்தரவின்படி, டிசம்பர் 31ம் தேதி வரை இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இது நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அத்தியாவசிய சேவைகள், சரக்கு லாரிகள், அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த உத்தரவிலிருந்து விலக்கு தரப்பட்டு உள்ளது.  சமூக மற்றும் வழக்கமான விழாக்களில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.