வேலூர்:

வேலூர் அருகே உள்ள அமிர்தி மிருகக்காட்சிசாலையில் இரவு சஃபாரி வனத்துறையால் அமைக்கப்பட்டும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

தமிழ்நாடு வனத்துறையினர் நடத்திய ‘வனவிலங்கு வாரம்’ கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமிர்தி வனப்பகுதி அதன் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை ஒரு பெரிய விலங்கியல் பூங்காவாக வளர்ந்து வருகிறது என்றும், அங்கு இரவு சஃபாரி நடத்தப்படுவது குறித்து வனத்துறையினர் அறிக்கை தந்துள்ளதாகவும், விரைவில், அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

வேலூர் நகரில் இருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் உள்ளது. 25 ஹெக்டேர் அளவுக்குப் பரந்து விரிந்துள்ளது அமிர்தி உயிரியல் பூங்கா. இங்கு அழகான நீர்வீழ்ச்சி ஒன்றும் காணப்படுகிறது. அமிர்தி வனத்தின் பாதி பரப்பளவு வனவிலங்கு சரணாலயத்திற்கும் மாறு பாதி சுற்றுலாத் தலமாகவும் பிரித்துப் பராமரிக்கப்படுகிறது.

சுமார் ஒரு கீலோமீட்டர் தூரத்தில் உள்ள மலையேற்றம் ஒரு அழகான நீர்வீழ்ச்சியை முழுமையாகப் பார்வையிட வழி வகுக்கிறது. நீர்வீழ்ச்சியில் பருவமழை காலங்களில் நீரின் வீழ்ச்சி அதிகமாக இருக்கும். இவ்வன விலங்குப் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், நரிகள் குரங்குகள், சிவப்புதலைகிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள்,வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப்பாம்புகள் முதலியன வாழ்கின்றன.

வேலூரில் நடைபெற்ற ‘வனவிலங்கு வாரம்’ விழாவில் கலந்துகொண்ட தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அமைச்சர் வீரமணி, நிலோகர் கபில், மாவட்ட கலெக்டர் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழச்சியில், அமைச்சர்  சுய உதவிக்குழுக்களுக்கு. 38.70 லட்சம் மதிப்புள்ள நிதி உதவிகளையும், 323 நபர்களுக்கு. 32.30 லட்சத்தையும் சுழல் நிதியாக விநியோகித்தார்.

விழாவில் பேசிய வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி,  மாணவர்கள் தங்கள் பகுதியில் வனப்பகுதியை மேம்படுத்த புதுமையான தீர்வுகளை கொண்டு வர வேண்டும் என்றார்.

மனித-காட்டு விலங்கு மோதல்களைக் குறைக்க இழந்த வனப்பகுதிக்கு ஈடுசெய்வது முக்கியம் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கஃபீல் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய  திண்டுக்கல் சீனிவாசன், அமிரிதி  வனவிலங்கு பூங்காவில் உள்ள மிருகங்களை  இரவு நேரங்களில் பார்க்கும் வகையில் இரவு  சஃபாரி வனத்துறையில் ஏற்படுத்தப்படும் என்றார்.

நிகழ்ச்ச்சியல்  மாவட்ட கலெக்டர் ஏ.சண்முக சுந்தரம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர், ஷம்பு கல்லோலிகர், மற்றும் முதன்மை வனத்துறை பாதுகாவலர் மற்றும் வன படையின் தலைவர் பி.தூராய்ஜ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.