விஜய் சேதுபதி பட நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம்.. சிரஞ்சீவி நேரில் வாழ்த்து..

விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லேன்’. இப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிஹாரிக கொனிடெலா. இவர் தெலுங்கில் ஒக மனசு, ஹாப்பி வெட்டிங் போன்ற படங்களில் நடித்திருப்பதுடன் வெப் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.


நிஹாரிக்காவுக்கும், தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் சைதன்யா ஜொனல கெட்டாவுக்கும் நேற்று ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது.
நிஹாரிகா கொனிடெலா. மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் மற்றும் நடிகர் நாகபாபுவின் மகள் ஆவார். மாப்பிள்ளை சைதன்யா , இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ் முன்னாள் மாணவர் அத்துடன் ஐதாராபாத் தொழில் நிறுவனம் ஒன்றில் உயர் பதவி வகிக்கிறார்.
நிஹாரிகா, சைதன்யா திருமணத்தை வரும் டிசம்பர் மாதம் நடத்த திட்டமிட்டிருக்கின் றனர். முன்னதாக நிச்சயதார்த்த விழாவில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் கடை பிடிக்கப்பட்டது,