விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நிஹாரிகா கொனிடெலா.
இவர் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான நாகேந்திர பாபுவின் மகள்.நிஹாரிகாவின் சகோதரர் வருண் தேஜ் டோலிவுட் ஹீரோ ஆவார்.
2 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அசோக் செல்வன் நடிக்கும் காதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார்
நிஹாரிகா நடிப்பில் கடைசியாக வெளியான படம் சயீரா நரசிம்ம ரெட்டி. இந்நிலையில் நிஹாரிகாவுக்கு திருமணம் என்று பேச்சு கிளம்பியது.
இது குறித்து நிஹாரிகாவின் தந்தையான நாகேந்திர பாபு தற்போது மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெறும் என கூறியுள்ளார்.