நிகாரிகா போனார்.. மேகா ஆகாஷ் வந்தார்.

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன்’’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகமானார், நிகாரிகா கொனொடேலா.

சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றிய சுவாதினி, இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப் படாத படத்தில் நடிக்க நிகாரிகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

அசோக்செல்வன் ஜோடியாக, நிகாரிகா நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு , கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில் .தொடங்குவதாக இருந்தது.

கொரோனா காரணமாக படப்பிடிப்பு திட்டமிட்ட படி ஆரம்பமாகவில்லை.

இந்த படத்தில் ’’டோங்கா’’ நடனக்கலைஞராக நடிக்க விருந்த நிகாரிகா, அந்த நடனமும் கற்று வந்தார்.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகும் நிலையில், நிகாரிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாத சூழல். அவருக்கு பதிலாக இப்போது மேகா ஆகாஷ், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

-பா.பாரதி.