ட்விட்டர் பக்கத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ள நிகிஷா படேல்…!

தமிழ், தெங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும் நிகிஷா படேல், தற்போது சரண் இயக்கத்தில் பிக் பாஸ் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.

சமூகவலைதளத்தில் பிகினி உடையில் ரொம்ப ஹாட்டாக புகைப்படங்களை வெளியிடுவதில் நிகிஷா படேலை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என சொல்லலாம் .

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிகிஷா படேல், சமீபத்தில் பவன் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார். அந்த ட்வீட்டில் அவர் தவறான ஹேஷ் டேக் பயன்படுத்தியிருந்தார். பவன் கல்யாண் ரசிகர்கள்,இதை வைத்து நிகிஷா பட்டேலை கிண்டல் செய்து ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர் .

இதனால் நிகிஷா, ட்வீட்டர் பக்கத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார் .

கார்ட்டூன் கேலரி