100 பேருடன் நடைபெற்றது முன்னாள் முதல்வர் குமாரசாமி மகன் திருமணம்… வீடியோ

பெங்களூரு:

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகிலுக்கு இன்று ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டபடி,  அவர்களது பண்ணை வீட்டில் சுமார் 100 பேர்கள் கலந்துகொண்ட நிலையில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில், கலந்துகொண்டவர்களில் பெரும்பாலோர் முகக்கவசம் இன்றியும்,  சமூக விலகலை கடைபிடிக்காமலும் நடந்துகொண்டனர்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஹெச்டி குமாரசாமியின் மகன்  நிகில் குமாரசாமிக்கும், ரேவதிக்கும் இன்று நிச்சயிக்கப்பட்டபடி திருமணம் நடந்தது. மணமகள் ரேவதி, முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் எம். கிருஷ்ணப்பாவின் உறவினர். இவர்களுக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி  குமாரசாமியின் தந்தையுமான தேவ கவுடாவின் இல்லத்தில் இன்று திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

இந்த  திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100 பேர் வரை கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்தில் கலந்துகொள்ள செய்தியாளர்களுக்கோ, கட்சித் தொண்டர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

பெங்களூர் பகுதி கொரோனா ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்ட நிலையில், திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் யாரும் எந்தவித பாதுகாப்பு கவசங்களும் அணியவில்லை.

முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்பட பெரும்பாலோர்  சமூக விலகல் கடைபிடிக்காமலும் கலந்துகொண்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.