ரவுடி பேபி பாட்டுக்கு அப்பாவுடன் டான்ஸ் ஆடும் நிக்கி கல்ராணி…..!

ஜி.வி. பிரகாஷ் குமாரின் டார்லிங் படம் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர் நிக்கி கல்ராணி.

நிக்கி தமிழ் தவிர்த்து மலையாள படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கியிருக்கும் நிக்கி தன் அப்பாவுடன் சேர்ந்து தனுஷின் மாரி 2 படத்தில் வந்த ரவுடி பேபி பாடலுக்கு முன்பு டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். லாக்டவுன் நேரத்தில் தன் தந்தையை மிகவும் மிஸ் பண்ணுவதாக தெரிவித்துள்ளார் நிக்கி.

நிக்கி வெளியிட்ட ரவுடி பேபி வீடியோ வைரலாகியுள்ளது.