கனமழை : நீலகிரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தகமண்டலம்

னமழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.   பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.   நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் பல நகரங்களின்  முக்கிய பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது.    போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.   இதை ஒட்டி நீலகிரி மாவட்ட நிர்வாகம் நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்துள்ளது.

இந்த பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.  அங்கு வசித்தவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.     கனமழையுடன் பலத்த காற்றும் தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் காரணமின்றி வெளியே வர வேண்டாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி