Random image

மனித உரிமை ஆர்வலர்கள் கைது……இந்திய ஒப்பந்தங்களை ரத்து செய்ய ஐரோப்பியா எம்.பி.க்கள் போர்க்கொடி

ப்ருசெல்ஸ்:

இந்தியாவில் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் விடுதலை செய்யும் வரை அந்நாட்டுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று ஐரோப்பா ஆணையத்தை 9 ஐரோப்பிய நாடாளுமன்ற எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளனர்.

ஐரோப்பியா யூனியனின் அன்றாட நடவடிக்கைகளை நிர்வாகம் செய்யும் ஐரோப்பியா ஆணையம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை விடுதலை செய்யும் வரை ஒப்பந்தங்களையும், தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும் என்று லிடியா சென்ரா, ஏஞ்சலா வாலினா, பலோமா லோபேஸ், மீர்ஜா கில்லோனென், அனா கோம்ஸ், கிளாரா அகுயில்லெரா, சிப்ரியன் தனசேசு, கிளவுடே மொரேஸ், ஜூலி வார்டு ஆகிய 9 எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கைது செய்யப்பட்ட 10 மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டு கொள்கை தூதருக்கு எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.