மணிப்பூரில் கடும் மழை: நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி
மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகினர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா, மணிப்பூர், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் டேமங்லாங் மாவட்டடம் தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில், டேமங்லாங் மலைப்பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில், மலையின் அடிவாரத்தில் இருந்த வீடுகள் மண் குவியலால் மூடப்பட்டன. பல வீடுகள் உடைந்து நொறுங்கின. இந்த திடீர் விபத்தில் அந்த வீடுகளில் இருந்தவர்களும் மண்ணில் புதையுண்டு சமாதியாகினர்.
இந்த நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.