சோமாலியா அதிபர் மாளிகை அருகே வெடிகுண்டு தாக்குதல்…9 பேர் பலி

மொகடிஷு:

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள அதிபர் மாளிகை, உள்துறை அமைச்சக தலைமையம் அருகே இன்று இரு கார் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.

இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் 9 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் பலர் தீவிர காயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.