சென்னை :

கேரளாவில் இருந்து வரும்  பயணிகள் பரிசோதிக்க படுவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.  தமிழகத்திற்கும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது

இதனையடுத்து, கேரளா எல்லையில் உள்ள தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் பயணிகளிடம் மருத்துவ குழு சோதனை நடத்தியது.

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை செக்போஸ்ட் செக்போஸ்ட் வெளியில் நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர்.

பாதுகாப்பு நடவடிக்கைக்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிபா வைரஸ் தமிழகத்திலும் பரவாமல் தடுக்க இத்தகைய பரிசோதனைகள் நடத்தப் பட்டதாகவும், இதற்காக அச்சப்பட தேவையில்லை என்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்

தமிழகத்தின் எல்லையில் கேரளாவில் இருந்து வரும் பஸ்கள் நிறுத்தப்பட்டு ஒவ்வொரு பயணியையும் மருத்துவ குழுவினர் பரிசோதித்த தாகவும், யாருக்காவது நிபா வைரஸ் பாதிப்பு இருந்தால் அவர்களை தமிழகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

கன்னியாகுமரி நீலகிரி கோயம்புத்தூர் ஊட்டி திண்டுக்கல் திருநெல்வேலி மற்றும் தேனி ஆகிய இடங்களில் அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், எர்ணாகுளத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த கேரளாவை சேர்ந்த 23 வயது இளைஞர் வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் அசோகன் கூறும்போது நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக 30 வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

நிபா வைரஸ் அறிகுறிகள் தெரிந்தால் உடனே சிகிச்சை அளிப்பதற்கான தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கேரளாவில் அம் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க  ஒவ்வொரு நபரிடமும் சோதனை நடத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் 2018 -ம் ஆண்டுக்கு பிறகு நிபா வைரஸ் பற்றி தெரியவந்தது. 17 பேர் உயிரிழந்ததை அடுத்து நிபா வைரஸ் குறித்த விவரம் வெளியே கசிய தொடங்கியது. இந்த நோயை குணப்படுத்த மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.