புதுடெல்லி:

ரூ.26 ஆயிரம் கோடி வங்கி மோசடி செய்து விட்டு தப்பியோடிய நிரவ் மோடி, லண்டனில் ரூ. 73 கோடியில் பங்களா வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.


வங்கியில் கடன் பெற்று ரூ.26 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக, வைர வியாபாரி நிரவ் மோடி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், லண்டனுக்கு தப்பியோடிய நிரவ் மோடி, ரூ.73 கோடி பணமாக கொடுத்து அங்கு பங்களா  வாங்கியுள்ளார். இதற்கான ஆவணங்களும் ஆதாரமாக வெளிவந்துள்ளது.

இது குறித்து செய்தி வெளியிட்ட காங்கிரஸ் கட்சி, ” குட்டி மோடிக்கும் மோடி அரசுக்கும் தொடர்பு இருப்பதாகவும், இதனாலேயே நிரவ் மோடியை இந்தியாவிலிருந்து தப்பிக்க அனுமதித்துள்ளனர்.
இப்போது லண்டினில் நிரவ் மோடி ரூ.73 கோடி பணமாக கொடுத்து பங்களா  வாங்கிவிட்டார்.

இது தெரியாமல் இந்தியாவில் உள்ள அனைத்து புலனாய்வு அமைப்புகளும் உறங்கிக் கொண்டிருக்கின்றனவா?

பிரதமர் மோடியின் செல்வாக்கைப் பயன்படுத்தி, இங்கிருந்து கொள்ளையடித்துச் சென்ற பணத்தை வைத்து லண்டனிலும் நிரவ் மோடி தங்க வியாபாரத்தை தொடங்கிவிட்டார்.

லண்டனின் நிரவ் மோடி சுதந்திரமாக நடமாடுவதாகவும், அவரைப் பார்த்தபோது ரூ.9 லட்சம் மதிப்புள்ள கோட் அணிந்திருந்ததை டெய்லி டெலிகிராப் பத்திரிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

நிரவ் மோடி லண்டலிருந்து இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேடு, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் மற்று ஹாங்காக்கிற்கு அடிக்கடி சென்று வருகிறார்.
நிரவ் மோடி மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மோடி அரசு நிரவ் மோடி போன்ற பொருளாதார குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பதற்கு இதைவிட வேறு சான்று ஏதும் உண்டா? எனவும் காங்கிரஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.