லண்டன்:

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் லண்டன் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. ஆக.,22ந்தேதி வரை அவரது காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் பெற்ற ரூ.13,000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றார். லண்டனில் தலைமறைவாக இருந்த அவர், கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

லண்டனில் உள்ள வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமின் கேட்டு 4 முறை தாக்கல் செய்த மனுக்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில், 5வது முறை தாக்கல் செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டு உள்ளது.

நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வகையில், அவர்மீதான வழக்கு  தொடர்பான ஆவணங்கள்  லண்டன் கோர்ட்டில் இந்தியா தாக்கல் செய்துள்ளது. இந்j நிலையில் அவரது  மனு இன்று(ஜூலை 25) விசாரணைக்கு வந்த போது, அவரின் ஜாமின் மனுவை தளளுபடி செய்ததுடன், அவரின் காவலை ஆக., 22 வரை நீட்டித்து உத்தரவிட்டது.