சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் நிரவ்மோடி லண்டனில் பதுங்கல்….அமலாக்க துறை

மும்பை:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார்.

அவர் ஹாங்காங்கில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை இந்தியா அழைத்து வர மத்திய அரசின் விசாரணை முகமைகள் நடவடிக்கை எடுத்தன. ஆனால், நிரவ் மோடி தற்போது ஹாங்காங்கில் இல்லை என்ற தகவல் அமலாக்க துறைக்கு கிடைத்துள்ளது.

அவர் சிங்கப்பூர் பாஸ்போர்ட்டில் லண்டனில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் நிஷால் மோடி பெல்ஜியம் பாஸ்போர்ட்டில் அன்ட்வர்ப் நகரில் உள்ளார். அவரது தங்கை பூர்வி மேத்தா பெல்ஜியம் பாஸ்போர்ட்டில் ஹாங்காங்கில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இவரது கணவர் பிரிட்டன் பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இவர் ஹாங்காங்&நியூயார்க் இடையே அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருவது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் நிரவ் மோடி குடும்த்தினர் 5 பேருக்கும் அமலாக்க துறை இ.மெயில் மூலம் சம்மன் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.