மும்பை

ங்கி மோசடி செய்து தப்பி ஓடிய நிரவ் மோடியின் சொத்துக்கள் ரூ. 53.4 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வங்கியில் மோசடி செய்து விட்டு தனது குடும்பத்தினர் மற்றும் பங்குதாரருடன் வைர வியாபாரி நிரவ் மோடி நாட்டை விட்டு ஓடி விட்டார்.   சுமார் ரூ.13000 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ள நிரவ மோடி தற்போது லண்டன் சிறையில் அடைபட்டு ஜாமீன் கோரி வருகிறார்.   அவரது ஜாமீன் மனு நேற்று ஐந்தாம் முறியாக லண்டன் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.

வங்கிகளுக்கு அவர் அளிக்க வேண்டிய பணத்துக்காக அமலாக்கத்துறை அவருடைய சொத்துக்களை  ஏலம் விட்டு வருகிறது/   ஏற்கனவே அவருடைய சொகுசுக் கார்கள் ஏலம் விடப்பட்டன.  தற்போது அவருடைய சொத்துக்களான ஓவியங்கள்,சிலைகள், கடிகாரங்கள் உள்ளிட்ட  பல பொருட்கள்  கடந்த இரு நாட்களாக ஏலம் விடப்பட்டன.

நேற்றைய ஏலத்தில் 1935 ஆம் வருடம் அம்ரிதா ஷேர் கில் வரைந்த ஓவியம் ரூ.15.68 கோடிக்கு ஏலம்  போனது.   இந்த ஏலத்தில் இதுவே அதிக தொகையாகும்.  இதற்கு அடுத்தபடியாக எம் எஃப் ஹுசைனின் ஓவியம் ரூ.13.44 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.   மொத்தம் 112 பொருட்களை ஏலம் விட்டதில் ரூ.53.44 கோடி கிடைத்துள்ளது.

நிரவ மோடியின் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று ரூ.1.68 கோடிக்கும் கைக்கடிகாரம் ரூ.95.2 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன  இதைத் தவிர வேறு இரு கை கடியாரங்கள் தலா ரூ.78.4 மற்றும் ரூ.72.8 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளன.  புதன்கிழமை விடப்பட்ட ஏலத்தில் ரூ.2.29 கோடி மதிப்புள்ள பொருட்கள் விற்கப்பட்டுள்ளன.