நிரவ் மோடியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படவில்லை : அதிர்ச்சி தகவல்

டில்லி

ங்கி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டதே தவிர ரத்து செய்யப்படவில்லை என  மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14000 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.   இது குறித்து சிபிஐ விசாரணையை தொடங்கியதால் அவர் தனது கூட்டாளி மற்றும் குடும்பத்தினருடன் நாட்டை விட்டே ஓடி விட்டார்.  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அவருடைய பாஸ்போர்ட்டை முடக்கி உள்ளது.

அவரை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிக்க சிபிஐ முயன்று வருகிறது.    ஆனால் அவர் இருக்குமிடம் தெரியவிலை.   நிரவ் மோடி கடந்த ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு ஓடிய பின் அவர் தங்கியிருந்த நாடுகளில் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.  அந்த விசாரணையில் அவர் இந்திய பாஸ்போர்ட் மூலம் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ரவிஷ் குமார்,  “நிரவ் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.   இது குறித்து இந்தியாவில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு அரசுகளுக்கு தகவல் அனுப்பப் பட்டுள்ளது.   நமக்கு உதவும் பல வெளிநாட்டு அரசுகளிடம் அவரை கண்டுபிடிக்க உதவி கோரப்பட்டுள்ளது.

நிரவ் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதே தவிர  அதை அதிகார பூர்வமாக ரத்து செய்யவில்லை.   அதனால் ஒரு சில நாடுகளில்  அவரால் தனது இந்திய பாஸ்போர்ட்டைக் கொண்டு பயணம் செய்ய முடிகிறது.” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.