மும்பை:

பிஎன்பி மோசடி மன்னன் நிரவ் மோடியின் ரூ. 170 கோடி மதிப்பு சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) ரூ.13 ஆயிரம் மோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கை அமலாக்கத்துறை, சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாடு தப்பி ஓடிவிட்டார்.

கடந்த மார்ச்சில் நிரவ் மோடியின் ரூ. 7,000 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கப்பட்டது. இதையடுத்து இன்று மும்பையில் உள்ள ரூ. 170 கோடி மதிப்பு சொத்துக்களை அமலக்காத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.