லண்டன்:

ஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன்வாங்கிவிட்டு வெளிநாடு தப்பிச் சென்ற பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி லண்டனில் சிறைபட்டுள்ள நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடுத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக நிரவ் மோடி நாடு கடத்தப்படுவதில் மேலும் 8 மாதங்கள் தாமதம் ஆவது உறுதியாக உள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றார். லண்டனில் தலைமறை வாக இருந்த அவர், கைது செய்யப்பட்டு, அங்குள்ள வாண்ட்ஸ் வோர்த் சிறையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமின் மனு பல முறை நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்றும் (ஆகஸ்டு 22ந்தேதி) விசாரணை நடைபெற்றது.

அவரை ஜாமினில்  வெளியே விட இந்திய அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அவருக்கு நீதிமன்றம்  ஜாமீன் கொடுக்க மறுத்து விட்டது. நேற்றைய விசாரணையின்போது,  நீரவ் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, நீரவ் மோடியை இந்தியா விடம் ஒப்படைப்பது தொடர்பான மனு மீது,  5 நாள் விசாரணை நடத்துவது தொடர்பாக இரு தரப்பு வழக்கறிஞர்களிட மும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இரு தரப்பனிரும் அனுமதி அளித்த நிலையில்,  அடுத்த ஆண்டு (2020)  மே 11ம் தேதி முதல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.  ஆனால், இந்த தேதி அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அடுத்த விசாரணை செப்டம்பர் 19ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் நிரவ் மோடி நாடு கடத்தப்படுவது தொடர்பான  விசாரணை தேதி இறுதி செய்யப்படும் என  தெரிகிறது.