போலி வைரங்கள் விற்பனை செய்து பொதுமக்களையும் ஏமாற்றிய நிரவ் மோடி

டில்லி:

ஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினரான மெகுல் சோக்சி ஆகியோர் மீது சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் தேடி வருகின்றன.

இந்த நிலையில்,  போலி வைரக்கற்களை விற்பனை செய்து பொதுமக்களையும் நிரவ் மோடி ஏமாற்றி உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி விட்டு வெளிநாடு தப்பிச்சென்று தலைமறைவாக வாழ்ந்து வரும் குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி,  போலியான வைரக் கற்களை விற்பனை செய்து பொதுமக்களையும் ஏமாற்றி  கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ள உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற செய்தித்தாளில்  செய்தி வெளியாகி உள்ளது. அதில், கனடாவை சேர்ந்த ஒருவருக்கு 200,000 அமெரிக்க டாலர்களுக்கு போலியான வைர மோதிரங்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக அந்த நபரின் காதலி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பால் அல்ஃபோன்ஸோ என்பவர் கூறும்போது,  இந்த போலியான வைரம் காரணமாக தனக்கும் தனது காதலி குடும்பத்தினருக்கும்  இடையேயான உறவு பாதிக்கபட்டது.. நான் வேண்டுமென்றே, இந்த போலி மோதிரங்களை வாங்கினேன்  என்று அவர்கள் நினைக்கிறார்கள், “என்று கூறி உள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு  அல்ஃபோன்ஸோ நிரவ் மோடியை சந்தித்ததாகவும் அப்போது, 120,000 அமெரிக்க டாலரில் உயர்தர தரம் மற்றும் நிறமற்ற வைர மோதிரங்கள்  வாங்கப்பட்டது என்றும், இதை தனது காதலிக்கு அணிவிப்பதற்காக பயன்படுத்தியதாகவும் தெரிவித்து உள்ளார்.

ஆனால், இந்த வைர மோதிரம் வாங்கியபோது, அதற்காக நிரவ் மோடியிடம் இருந்து எந்தவித விலைப்பட்டியல் மற்றும் நம்பகத் தன்மை சான்றிதழையும் பெறவில்லை என்றும், அதை ஒரு மதிப்பீட்டாளரிடம் பரிசோதித் தபோது, அந்த கற்கள் போலிய்வை என்பது தெரிய வந்தது என்றும் கூறி உள்ளார். இந்ததகவல் தற்போது மேலும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது. s of jewellery to win customers’ trust.