சிவகார்த்திகேயன் புதிய படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா ஒப்பந்தம்…!

‘Mr.லோக்கல்’ ‘ஹீரோ’ படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்திலும் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன் .

இந்த படத்திற்கான படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்வதில் மும்முரமாகி இருக்கிறார் பாண்டிராஜ். இதன் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் நடிக்கவிருந்தாலும், சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக வேறொருவர் நடிக்கவுள்ளார். இதற்கான தேர்வும் தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.