புதுடில்லி:  2012 ஆம் ஆண்டு நடந்த நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரின் கருணை மனுவை நிராகரித்த தில்லி அரசின் பரிந்துரையை உள்துறை அமைச்சகம் பெற்றுள்ளது என்று அதிகாரிகள் 4ம் தேதி தெரிவித்தனர்.

கருணை மனுவை நிராகரிக்கும் கோப்பை டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார். இந்த கோப்பை உள்துறை அமைச்சகம் பரிசோதித்து பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பரிசீலனை மற்றும் இறுதி முடிவுக்கு அனுப்பப்படும்.

23 வயது துணை மருத்துவ மாணவியை கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்ததற்காக தூக்கு மேடையை எதிர்கொள்ளும் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, ஜனாதிபதி முன் கருணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

டிசம்பர் 16, 2012 அன்று நிர்பயா மீது பாலியல் பலாத்காரம் நிகழ்த்தப்பட்டது. பின்னர் அவர் அதனால் ஏற்பட்ட காயங்களுக்கு பலியானார். அக் கற்பழிப்பின் மிருகத்தனம் தேசத்தையே உலுக்கியது, தேசம் முழுவதும்பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்தது.

சில நாட்களுக்கு முன், ஹைதராபாத்தில் 25 வயது கால்நடை மருத்துவரை கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது குறித்து நாடு தழுவிய சீற்றம் நிலவும் இந்த நேரத்தில கருணை மனுவை டெல்லி அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.