குடியரசு தலைவரிடம் மீண்டும் கருணை மனு அளித்த நிர்பயா கொலையாளி

டில்லி

நிர்பயாவை பலாத்காரம் மற்றும் கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் மீண்டும் குடியரசுத் தலைவருக்கு கருணம் மனு அனுப்பி உள்ளான்.

டில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய் குமார் உள்ளிட்ட நால்வருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது  நால்வரும் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இரு முறை அவர்கள் செய்த கருணை மனுத் தாக்கல்,  மறுசீராய்வு மனு அளித்தல் போன்ற நடவடிக்கைகளால் தூக்கு தண்டனை தேதி தள்ளிப்போனது.   பவன்குமார் குப்தா தனக்கு அளித்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க மறு சீராய்வு மனு அளித்திருந்தான்.   அவனுடைய மறுசீராய்வு மனு நாளை மறுநாள்  உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் மற்றொரு குற்றவாளியான அக்‌ஷய் குமார் மீண்டும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி உள்ளான்.  அவன் ஏற்கனவே அனுப்பிய கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  அந்த மனுவில் முறையான காரணங்களைச் சரியாகத் தெரிவிக்கவில்லை எனக்  கூறி தற்போது மீண்டும் கருணை மனுவை அனுப்பி உள்ளான்.

You may have missed