டெல்லி:

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதி மனுக்கள் டெல்லி நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

நிர்பயா வழக்கில்  குற்றவாளிகள் 4 பேருக்கும்  பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தர விடப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், குற்றவாளிகளில் அக்சய் குமார் சிங், பவன் குமார் சிங் ஆகிய 2 பேர் சார்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் புதிய மனு  தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தங்களது  கருணை மனு மற்றும் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு போதிய ஆவணங்களை டெல்லி திகார் சிறை நிர்வாகம் வழங்கவில்லை என்ற கூறி, திகார் சிறை நிர்வாகத்துக்கு எதிராக மனு  தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறை நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,.  குற்றவாளிகள் தண்டனையை தாமதம் செய்யும் நோக்கில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தனர். அரசு தரப்பின் பதிலை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த நீதிமன்றம்,  குற்றவாளிகளின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து அவர்களின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது மீண்டும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.