நிர்பயா வழக்கு: குற்றவாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது! உச்சநீதி மன்றம்

டில்லி:

நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிர்பயா வழக்கில்  தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், தங்களது மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, உச்சநீதி மன்றம், மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று கூறி, குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது.

கடந்த 2012ம் ஆண்டு தலைநகர் டில்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி 6 பேர்  கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்L, அந்த கும்பலால் கொடூரமாக தாக்குதலுக்கும் ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் மரணத்து தழுவினார்.

தூக்கை எதிர்நோக்கி காத்திருக்கும்  ‘நிர்பயா’ வழக்கின் குற்றவாளிகள்இந்த வழக்கில் தொடர்புடைய 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளி சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் 18 வயதுக்கு குறைவானவர் என்பதால், அவர் 3 ஆண்டு தண்டனை பெற்று விடுதலை ஆகிவிட்டார்.

மற்ற 4 குற்றவாளிகள் மீது விசாரணை நடத்திய டில்லி உயர்நீதி மன்றம் அவர்க ளுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, குற்றவாளிகள் 4 பேரும்  உச்சநீதி மன்றத் தில் மேல்முறை யீடு செய்திருந்தனர். ஏற்கனவே 4 முறை முறையீட்டு செய்யப்பட்ட நிலையில், தற்போது 4வது முறையாக முறையீடு செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று பிற்பகல்  உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்து உள்ளது. இது மிக கொடூர குற்றம் என்பதால் தூக்கு தண்டனையை குறைக்க முடியாது  என்று கூறியது.  இதன் காரணமாக அவர்களது மரண தண்டனையை உச்சநீதி மன்றம் இந்த முறையும் உறுதி செய்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Nirbhaya case: Supreme Court dismisses review pleas filed by three of the four convicts, நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4பேரின் தூக்குதண்டனையை உறுதிசெய்தது உச்சநீதிமன்றம்!
-=-