நிர்பயா வழக்கில் 4 பேரையும் தூக்கிலிடும் புதிய தேதி: உச்ச நீதிமன்றம் அனுமதி

டெல்லி: நிர்பயா வழக்கில், 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை, சிறை நிர்வாகம் விசாரணை நீதிமன்றத்தை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வரையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதி மறுத்து, தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி உயர் நீதி மன்றம் தடை விதித்தது. நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய மற்றும் டெல்லி அரசுகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து பதில் அளிக்குமாறு குற்றவாளிகள் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

நீதிபதி பானுமதி தலைமையில் 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றற புதிய தேதியை விசாரணை நீதிமன்றத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கியுள்ளது.

நான்கு குற்றவாளிகளும், சட்ட நிவாரணம் பெறுவதற்கான உச்ச நீதிமன்றம் வழங்கிய அவகாம் முடிந்துள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதே சமயம், மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனுக்களால், தூக்கு தண்டனையை நிறைவேற்ற விசாரணை நீதிமன்றம் விதிக்கும் தேதிக்கு எந்த முட்டுக்கட்டையாக இருக்காது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Nirbhaya case, Nirbhaya convicts, supreme court, உச்ச நீதிமன்றம், நிர்பயா குற்றவாளிகள், நிர்பயா வழக்கு
-=-