நிர்பயா வழக்கு: மரண தண்டனையை ரத்து செய்ய கோரிய மனுமீது இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு

டில்லி:

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிர்பயா என்ற இளம்பெண் வன்புணர்வு செய்யப்பட்டடு, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு டில்லி உயர்நீதி மன்றம் மரண தண்டனை வழங்கியது.

இதை எதிர்த்து, தங்களது மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி  குற்றவாளிகள் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

இதன் காரணமாக உச்சநீதி மன்றம் வளாகம் பரபரப்புடன் காணப்படுகிறது.

தூக்கை எதிர்நோக்கி காத்திருக்கும்  ‘நிர்பயா’  குற்றவாளிகள்

கடந்த 2012ம் ஆண்டு தலைநகர் டில்லியில் நிர்பயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மருத்துவ மாணவி 6 பேர்  கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்L, அந்த கும்பலால் கொடூரமாக தாக்குதலுக்கும் ஆளானார்.

அதைத்தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணத்தை தழுவினார்.

இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அரசியல் கட்சியினர் மட்டுமின்றி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

அதைத்தொடர்ந்து குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளி சிறைச்சாலையில் தற்கொலை செய்துகொண்டார். இவர்களில் ஒருவர் 18வயதுக்கு குறைவானவர் என்பதால் 3 ஆண்டு தண்டனை பெற்று விடுதலை யானார்.

மீதமுள்ள 4 குற்றவாளிகளுக்கும் டில்லி உயர்நீதி மன்றம் தூக்கு தண்டனை விதித்து.

டில்லி உயர்நீதி மன்றம் விதித்த தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதி மன்றத் தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Nirbhaya case: Supreme Court verdict likely today on pleas for review of death penalty, நிர்பயா வழக்கு: மரண தண்டனையை ரத்து செய்ய கோரிய மனுமீது இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு
-=-