டெல்லி:

மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை செய்யப்பட்ட டிசம்பர் 12ந்தேதியை இந்திய மக்களால் ஒருபோதும் மறக்க முடியாது…

அதுபோல, அந்த இளம்பெண்ணை சிதைத்த கொடூர குற்றவாளிகளையும் இந்திய மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்… அவர்கள் இன்று தூக்லிடப்பட்ட நாளையும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்…

சரியாக நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, இன்றுடன் 2ஆயிரத்து 650வது நாள் இன்று ஆகிறது… (2650) இன்றைய நாள், குற்றவாளிகளுக்கு விடியா…  நாளாக ஆகி உள்ளது…

ஆம்… பல்வேறு தடைகளை தாண்டி, குற்றவாளிகள் 4 பேரும் இன்று தூக்கிலிடப்பட்டு உள்ளனர்….

குற்றவாளிகளான  முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் ஷர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகியோர்   அதிகாலை  5.30க்கு டெல்லி திகார் சிறையில் உள்ள தூக்கு மேடையில், ஒரே நேரத்தில் தூக்கிலேற்றப்பட்டனர்…

தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை திகார் சிறை இயக்குனர் ஜெனரல் சந்திப் கோயல் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக நள்ளிரவு நடைபெற்ற வழக்கு விசாரணையைத் தொடர்ந்து திகார் வளாகமே பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

அதிகாலை 03:41: விசாரணையில் கலந்துகொண்ட  நிர்பயா தாயார்,  என் மகளுக்கு இறுதியாக நீதி கிடைக்கும் என்பதில் மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

அதிகாலை  03:47:  குற்றவாளிகளை இறுதியாக சந்திக்க அவர்களது குடும்பத்தினர்  சிறைஅதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அதை ஏற்க திஹார் சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

அதிகாலை 04:18: நாட்டின் மகள்களுக்கு நீதி கிடைத்து இருப்பதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்..

அதிகாலை 04:33  மரணதண்டனைக்கு முன்னதாக திகார் சிறை பூட்டப்பட்டது.

அதிகாலை 04:44:  திகார் சிறைக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

அதிகாலை 05:13 : திகார் சிறைக்கு வெளியே மக்கள் கூட்டம் 

முன்னதாக நீதிமன்ற  தீர்ப்பை நிறைவேற்ற தேவையான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் செய்து வந்தது.

  • அதிகாலையிலேயே குற்றவாளிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
  • குளித்து முடித்து கருப்பு நிற ஆடைகளை அணிந்தனர்
  • சிறை அதிகாரிகள் மறறும் மருத்துவர்கள் அவர்களின் உடல் பரிசோதனை மேற்கொண்டனர்
  • பின்னர் குற்றவாளிகள் செல்லில் இருந்து தூக்கு மேடை உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றனர்
  • மீண்டும் ஒருமுறை அவர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு, அவர்கள் தூக்கிலிடப்படுவதற்கான நீதிமன்ற உத்தரவு படித்து காண்பிக்கப்பட்டது.
  • பின்னர் அவர்கள் முகம் கறுப்பு துணியாலான பையால் மூடப்பட்டு, கால்கட்டப்பட்டு, தூக்கு மேடையில் ஏற்றப்பட்டனர்.
  • சரியாக 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.