ராகுலுக்கு நன்றி சொல்லும் ‘நிர்பயா’வின் தாயார்!

டில்லி

ராகுல் காந்தி கொடுத்த அறிவுரைகளினால் தனது மகன் விமான ஓட்டி ஆனதாக நிர்பயாவின் தாய் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ஆம் வருடம் ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும் அந்த நிகழ்வு நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கியது தெரிந்ததே. அந்தப் பெண்ணுக்கு “நிர்பயா” எனப் பெயர் சூட்டப்பட்டது.  அதற்கு பயம் அற்றவள் என பொருள் ஆகும்.  இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.  ஒருவர் போலீஸ் காவலில் மரணம் அடைந்தார்.    பாக்கி உள்ள நான்கு வயது வந்தோருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.  ஒருவர் சிறுவன் எனக்கூறி மூன்று வருடம் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.

நிர்பயாவின் தம்பியான அமன் (இதுவும்புனைப்பெயரே) இந்த சம்பவம் நடந்ததில் இருந்தே மன உளைச்சலுடன் இருந்தார்.  இந்த சம்பவம் நடந்த போது 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அமனை இந்நிகழ்வு பெரிதும் பாதித்தது.   இதனால் கவலை அடைந்த அவர் தாய் ஆஷாவுக்கு தனது ஆலோசனைகள் மூலம் தைரியத்தை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அளித்துள்ளார்.

அத்துடன் அமனுடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடி சிறிது சிறிதாக வருடைய மன உளைச்சலை நீக்கி உள்ளார்.   அத்துடன் ராணுவத்தில் சேர உத்தேசித்திருந்த அமனால் ராணுவத்தில் சேர முடியாததால் ஏமாற்றம் அடைந்துள்ளார்.   அவரிடம் பேசி அவரை விமான ஒட்டும் பயிற்சியில் சேர ராகுல் உதவி உள்ளார்.   காங்கிரஸ் தலைவரின் தொகுதியான ரே பரேலியில் உள்ள விமான ஓட்டிகள் பயிற்சிப் பள்ளியில் சேர்த்து அவருடைய பயிற்சி விவரங்களை அவ்வப்போது கண்காணித்து வந்துள்ளார்.  அமன் சோர்வுற்ற நேரங்களில் எல்லாம் அவர் தேறுதல் அளித்துள்ளார்.

தற்போது விமான ஓட்டியாக பணி புரியத் தயாராக உள்ள அமனுடைய தாயார் ஆஷா இந்த தகவல்களை தெரிவித்து ராகுலுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.  மேலும் ராகுல் மூலமாகவே தன் மகன் மன உளைச்சலில் இருந்து மீண்டார் எனவும் ஆஷா தெரிவித்துள்ளார்.