நிர்மலாதேவி விவகாரம்: முருகன் ஜாமின் மனு மீது பதில் அளிக்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி:

ல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுத்த பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் கைது செய்யப்பட்ட  ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமின் மனு குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர்  தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, தனது கல்லூரியில் படிக்கும் மாணவிகளை  பணம் மற்றும் அதிக மதிப்பெண் வழங்குவதாக ஆசை காட்டி பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம்  பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக நிர்மலாதேவிக்கு உடந்தையாக இருந்ததாக,  துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கீழ் நீதி மன்றம் முதல் சென்னை உயர்நீதி மன்றம் வரை ஒரு நீதி மன்றமும் ஜாமின் கொடுக்க மறுத்துவிட்ட நிலையில் கருப்பசாமி தரப்பில் உச்சநீதி மன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கருப்பசாமியின் ஜாமின் மனு குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசிற்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணையின்போது, நிர்மலாதேவி தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கும்படி கருப்ப சாமி சார்பில் நீதி மன்றத்தில் மனு அளித்தார். அதை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.